Categories
மாநில செய்திகள்

17ம் தேதிக்குள் கல்லூரி தேர்வை நடத்தி முடிக்க திட்டம்… வெளியான அறிவிப்பு..!!!

கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டாவது நான்காவது மற்றும் ஆறு தேர்வுகளை வரும் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாகப் பரவி வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி கலை அறிவியல் கல்லூரிகளில் 2,4 மற்றும் ஆறாவது செமஸ்டர் தேர்வுகளை வரும் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மேலும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை கட்டாயம் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |