தேசிய கல்விக் கொள்கை குறித்த விவரங்கள் மாற்று மொழிகளில் வெளியிடப்பட்டதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட்டு அதில் பரிந்துரைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையின் விபரங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில், தமிழ் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.