Categories
மாநில செய்திகள்

17ஆம் தேதி சட்டப்பேரவை….. என்னென்ன திட்டங்கள் கொண்டு வரலாம்?….. அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!!

வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் சற்று முன்னதாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரக்கூடிய 17ஆம் தேதி குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பது தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய, கொண்டு வர வேண்டிய முக்கியமான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் குறிப்பாக இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யக்கூடிய புதிய சட்ட மசோதா குறித்தும், அதே போல மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை என்பது இந்த சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கக்கூடிய நிலையில், இது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்வது தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்ததுவதற்கான சட்ட மசோதாவை இந்த கூட்டத்தொடரில் கொண்டு வருவதற்காக அமைச்சர்களின் ஆலோசனை பெறப்படுவதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.

அதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கையையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 17ஆம் தேதி கூடக்கூடிய சட்டப்பேரவையில் இது தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் புதிய முதலீடுகள், வடகிழக்கு பருவமழை வரக்கூடிய நிலையில் அனைத்து துறைகளும் எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கைகளை செய்துள்ளனர் என்பது குறித்தும் துறைவாரியாக ஒவ்வொரு அமைச்சர்களிடமும் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக வரக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சட்ட விதிகள். சட்ட மசோதாக்கள் கொண்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |