பிரிட்டனில் ஸ்காட்லாந்தில் 160 வருடங்கள் பழைமையான ஒரு தேவாலயம் தீ விபத்தில் சேதமடைந்துவிட்டது.
ஸ்காட்லாந்தில் இருக்கும் கிளாஸ்கோ சிட்டி சென்டரில், அமைந்துள்ள செயின்ட் சைமன் ரோமன் கத்தோலிக்க பாரிஷ் தேவாலயத்தில் இன்று அதிகாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தேவாலயம் இருக்கும் பேட்ரிக் பிரிட்ஜ் என்ற வீதியில் உடனே 30க்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் குவிந்தனர்.
அதன்பின்பு தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். மேலும் தேவாலயத்தை சுற்றி அமைந்திருக்கும் வீடுகளில் இருக்கும் மக்கள், தங்கள் குடியிருப்புகளின் ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இப்பயங்கர தீ விபத்தில் உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை.
மேலும் சுற்றி அமைந்திருந்த வீடுகளுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும் தேவாலயம் மொத்தமாக எரிந்துபோனது. தற்போது வரை எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.