புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் நாயொன்று வெறிபிடித்து திடீரென அப்பகுதியில் உள்ள பலரைக் கடித்து துரத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து ஓடியுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருமயம் நெடுஞ்சாலை வழியாக சுமார் ஏழு மீட்டர் தூரம் வரை பார்க்கும் எல்லோரையும் அந்த நாய் துரத்தி கடித்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 16 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் ராயபுரம் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் வெறி நாயை தேடும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு உள்ளனர்.