கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 16 மாவட்டங்களில் ஜூன் 21 முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக தொற்று சில மாநிலங்களில் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால், தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், அங்கு 16 மாவட்டங்களில் ஜூன் 21-ஆம் தேதி ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என்றும் அனைத்து விடுதிகள், உணவகங்களும் குளிர்சாதன வசதி இன்றி மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.