Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த நொடிகளில் 16 பேர் பலி.. மாப்பிள்ளைக்கு படுகாயம்.. திருமண விழாவில் நேர்ந்த கொடூரம்..!!

வங்கதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது, மின்னல் உருவாகி 16 நபர்கள் உயிரிழந்ததோடு மாப்பிள்ளைக்கும் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபானவாப்கஞ்ச் என்ற மேற்கு மாவட்டத்தில், ஆற்றங்கரையை ஒட்டி இருக்கும் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது கனத்த மழை பெய்ததால் திருமணத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றுள்ளனர்.

அப்போது திடீரென்று அங்கு மின்னல் ஏற்பட்டதில், ஒரு சில நொடிகளில் 16 நபர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் மாப்பிள்ளைக்கும் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நல்லவேளையாக மணப்பெண் அந்த பகுதியில் இல்லை. எனவே, எந்த பாதிப்புமின்றி தப்பினார்.

Categories

Tech |