மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் என்ற மாவட்டத்தில் திருமணமான 16 வயது சிறுமி கடந்த 6 மாதங்களில் 400க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாகஉள்ள அந்த சிறுமி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதால் வீட்டை விட்டு ஓடிப்போக முயற்சி செய்துள்ளார்.
அப்போது பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கும்பல் அந்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளது. அதன் பிறகு கடந்த ஆறு மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக சிறுமி புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.