Categories
அரசியல்

16 வயதில் விவசாயம் செய்ய ஆரம்பித்து…. “23 வயதில் சாதித்த சூரஜ்”…. இளைஞரின் வெற்றி கதை…. வாங்க பார்ப்போம்….!!!!

16 வயதில் இயற்கை விவசாயத்தை செய்யத் தொடங்கி 23 வயதில் சாதித்து அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிய கேரளாவை சேர்ந்த சூரஜ் என்பவரை பற்றி இதில் நாம் பார்ப்போம்.

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு சுயமாக விவசாயம் செய்ய ஆரம்பித்து அடுத்த ஏழு வருடங்களில் நிறைய முன்னேற்றங்களை கண்ட சூரஜை ‘இவன் எப்படி விவசாயம் செய்ய போறான்’ அதெல்லாம் சரி வருமா? என்று பலரும் கேட்ட கேள்விக்கு பதிலாக தற்போது விளங்குகிறார். கேரளாவின் நம்பிக்கைக்குரிய இளம் விவசாயியாக விளங்கும் சூரஜ் மாநிலத்தின் பல்வேறு விவசாயிகளையும், வேளாண் அதிகாரிகளையும் தனது விவசாயத்தால் திரும்பிப் பார்க்கச் செய்தவர். இவரது பூர்வீகம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் என்கின்ற சின்ன கிராமம். இவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் தான்.

இவரது தந்தை கேரள மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உபயோகம் இல்லாமல் இருந்தது. அப்போது டீச்சராக இருந்த அவரின் அம்மா வீட்டு தோட்டத்தை சிறப்பாக கவனித்து வந்தார். அவருடன் சேர்ந்து இவரும் தோட்ட பணிகளை செய்து வந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது. இதனின் முதல் கட்டமாக ஒரு ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல்லான கண்டசாலா என்கின்ற நெல் ரகத்தை பயிரிட்டார். இதன் மூலம் ஆயிரத்து 800 கிலோ மகசூல் கிடைத்தது. இது மற்ற சுற்றுவட்டார பகுதியில் வழக்கமாக கிடைக்கும் மகசூலை விட அதிகம். அப்படி தான் இவரின் முதல் விவசாயம் ஆரம்பித்தது.

அதன்பிறகு ஒரு ஏக்கர் நிலத்தில் மற்றும் நெல் பயிரிட பயன்படுத்தி விட்டு மீதமுள்ள ஒன்றரை ஏக்கரில் 500 அவகேடா மரங்களும், 500 லிச்சி பழ வகைகளையும் நட்டார். இவ்விரு மரங்களுக்கும் இடையில் ஒரு ஏக்கர் நிலத்தில் பலவகை காய்கறி பயிர்களை வளர்த்தார். தனது படிப்பு போக மீதி நேரங்களிலும், சனி ஞாயிறுகளிலும் முழுக்க முழுக்க விவசாயங்களை மட்டும் பார்த்து அதில் முன்னேற்றம் கண்டார். படிப்புடன் விவசாயத்தையும் சேர்த்து பார்த்து அதில் வெற்றி கண்டார். நெல், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை தொடர்ந்து வளர்த்து வந்தார். திருச்சூர் வேளாண் பல்கலைக்கழகத்துல ஹாஸ்டல்ல தங்கி பி.எஸ்ஸி அக்ரிகல்ச்சர் படித்தார். அந்த காலகட்டங்களிலும் விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து விவசாயத்தை முழுமையாக பார்த்தார்.

அவர் இல்லாத நேரத்திலும் விவசாய வேலைகளை எப்படி செய்வது என்று வேலையாட்களுக்கு  கற்றுக் கொடுத்தார். ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை போட்டோ எடுத்து ஜுரத்துக்கு அனுப்புவார்கள். அதை கல்லூரியில் இருந்தபடியே அதற்கு தீர்வு கூறுமளவிற்கு வளர்ந்தார். கடந்த ஆண்டு படிப்பை முடித்துவிட்டு முழுநேர விவசாயியாக தற்போது வளர்ந்து நிற்கின்றார். பழ மரங்கள் இடையே தக்காளி, கத்தரி, வெண்டை, குடமிளகாய், பூசணி, அவரை, பச்சைமிளகாய், வாழை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காய்கறிகளையும் இஞ்சி, மஞ்சள் போன்ற காய்கறிகளையும் வளர்த்து வருகிறார். பருவநிலைக்கு ஏற்ற காய்கறிகளை பயிரிடுவதை மாற்றி வருகிறார்.

வருமானம் குறித்து அவர் கூறியபோது: “மழை வெயில் போன்ற காலநிலைக்கு ஏற்றவாறு வருமானம் மாறுபடும். காய்கறி விற்பனையில் மட்டும் மாதத்திற்கு 40,000 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைக்கின்றது. லிச்சி மற்றும் அவகேடா போன்ற பழங்களிலும் சில வருமானங்கள் கிடைக்கின்றது. என்னை பார்த்து சிலர் விவசாயம் செய்ய ஆரம்பித்தால் அது என்னுடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். எதிர்கால செயல்பாடுகள் பற்றி யோசிக்காமல் விவசாயம் சார்ந்த விவசாயிகளுக்கு பயன் கிடைக்கிற வகையிலும் சிறப்பாக செயல்படுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். சிறப்பான முறையில் விவசாயம் செய்யும் மாணவருக்கு, கேரள அரசு, ‘கர்ஷக பிரதீபா’ (karshaka prathibha) என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்துகிறது. 2014-ம் ஆண்டு, இந்த விருதைப் சூரஜ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |