இந்திய ரயில்வேயில் சரியாக செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் சென்ற 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஜூலை 2021 முதல் நாளொன்றுக்கு 3 பணியாளர்கள் வீதம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 139 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு 38 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 2 மூத்த அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர்களில் ஒருவர் ஐதராபாத்தில் ரூபாய். 5 லட்சமும், ராஞ்சியில் மற்றொருவர் ரூபாய்.3 லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்கள் ஆவர். எனவே வேலை செய்யாமல் வெறும் சம்பளம் வாங்குபவர்களுக்கு ரயில்வேயில் இடமில்லை என மந்திரி அஸ்விணி வைஷ்னவ் தெளிவுபடுத்தினார். அந்த வகையில் ஜூலை 2021 முதல் துவங்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின் கீழ், ஒவ்வொரு 3 நாட்களுக்கும் ஒரு ஊழல் அதிகாரி (அ) செயலற்ற ஊழியர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.