மாவட்ட குழு கூட்டத்தில் 16 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டத் தலைவர் ராகவன், பொருளாளர் சந்திரசேகரன், அமைப்பு நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பயிர் கடன் வழங்குதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
கூடுதல் பணியிடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 30 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் நடைபெற்ற பண பரிவர்த்தனைகளுக்கு 2% வருமான வரி, ரேஷன் கடைநிலை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 17 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும். மேலும் 50 கிலோ மீட்டருக்கு அப்பால் பணிநியமனம் செய்யப்பட்டவர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து தீர்மானத்தில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற மார்ச் 7- தேதி முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் ரேஷன் கடைகளை அடைத்துவிட்டு சாவிகளை மண்டல இணைப்பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ளனர்.