தென்னிந்திய திரையுலகில் பாரதி ராஜாவின் மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ரேவதி. 80களில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், மோகன் போன்றவர்களுடன் நடித்து அந்த காலத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ஆனால் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே பத்திரிகையாளரிடம் ரேவதி தன் வாழ்க்கை குறித்து கூறியுள்ளார்.
அதில் தான் 16 வயதிலேயே நடிக்க வந்ததாகவும் பிறகு 20 வயதில் திருமணமானதாகவும் கூறியுள்ளார். ஆனால் திருமண வாழ்க்கை எதிர்பார்த்த மாதிரி அமையாமல் இருவரும் விவாகரத்து பெற்றது ரேவதி மனதை பாதித்து சில வருடங்கள் வேதனைப்பட்டதாகவும் கூறியுள்ளார். எனக்கு சினிமாவில் நிலையாக நடிக்க முடியவில்லை மற்றும் வாழ்க்கையிலும் சந்தோஷம் இல்லை. இதனால் சிறிது காலம் அரசியலில் ஈடுபடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அதிலும் நிறைய பேர் என்னை ஏமாற்றினார்கள் என்று கூறியுள்ளார்.