Categories
தேசிய செய்திகள்

தொடர் பாலியல் குற்றங்கள் : 15 நிமிடத்திற்கு ஒரு முறை…. நீதிபதிகள் வேதனை….!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

நேற்று அசாம் மாநில பெண் ஒருவர் திருப்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை இணைத்து, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தியாவில் பாலியல் வன்கொடுமை நடப்பதாகவும், புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Categories

Tech |