களியக்காவிளையில் இளம்பெண் மாயமானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருக்கின்றன.
கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா 23 வயதான இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார் . சம்பவத்தன்று நிஷாவின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர் . பின்னர் வீடு திரும்பி பார்த்த பொழுது தனது மகள் நிஷா காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இதையடுத்து நிஷா மயமானதை உறுதி செய்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் நிஷாவை தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இதைப்போலவே நாகர்கோவில் கோட்ட பூங்கா அருகில் கல்லூரிமாணவி மாயமாகியுள்ளார்.ஒரேநாளில் அடுத்தடுத்து பெண்கள் மாயம் ஆவதால் குமரியில் அதிர்ச்சி நீடிக்கிறது.