கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிகொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெருவில் உள்ள திருமலை நகர் பகுதியில் வசித்துவருப்பவர் அருணாச்சலம் இவரது வயது 67. இவர் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து அறுக்கிலுள்ள மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தின் வலது புறமாக திரும்பும் போது எதிர் திசையில் இருந்தது வந்த மோட்டார் சைக்கிள் அவர் அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அருணாச்சலத்திற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. சுயநினைவின்றி உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . அங்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாகஉயிர் இறந்துள்ளார் இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.