உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மரியுபோல் நகரத்தில் தற்போது வரை 1582 மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகர்களை ஆக்கிரமித்த ரஷ்யப்படைகள், தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயத்தில் மரியுபோல் நகரில் ரஷ்யப்படைகள் வான்வெளி தாக்குதல் மேற்கொண்டது.
இதற்கு உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் நாட்டிற்கு, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், ஆயுதங்களும் நிதி உதவிகளும் அளித்து வருகிறது. இப்போரில், இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகமானது, மரியுபோல் நகரத்தில் தற்போது வரை நடத்தப்பட்ட தாக்குதலில் 1582 மக்கள் பலியாகியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.