Categories
அரசியல் செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள்

“கருத்துக் கணிப்பு வெளியிட தடை” தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு…!!!

பாராளுமன்ற தேர்தலில் கருத்து கணிப்பு வெளியிட தடை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு உத்தரவு

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .  இந்நிலையில் தமிழகத்தில் வருக்குன்ற 18 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக 40 பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது காலை  இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை ஏழு மணி முதல் இரவு எட்டு மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
தேர்தல் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு தகவல்கள்  கருத்துக் கணிப்புகள், மின்னணு இணையதளம் மூலமாக வெளியிடப்பட்டது தேர்தல் வர இன்னும் ஒரு வாரம் உள்ள.இந்நிலையில் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதை அடுத்து, இன்று காலை 7 மணியில் இருந்து மே 19- தேதி மாலை 6.30 மணி வரை, மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தொடர்பாக, வாக்குப்பதிவுக்கு பின்பு கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதை   மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது மற்றவகையில் பரப்புவது தடை செய்யப்படுகிறது. மக்களவை தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் நிறுத்தப்பட்டு, வாக்குப்பதிவு முடிவடைவதற்காக கணக்கிடப்பட்ட நேரத்துக்கு இடையில் 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட  தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது

Categories

Tech |