Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 152 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 1,691 பேர்… பினராயி விஜயன்!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,604 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனா பாதித்த 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,882 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. மேலும் 6வது நாளாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. மேலும் இன்று கொரோனா பாதித்தவர்களில் 98 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். 46 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் 8 பேருக்கு தொடர்பு மூலம் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் பதனம்திட்டா – 25, கொல்லம் – 18, கண்ணூர் – 17, பாலக்காடு – 16, திருச்சூர் – 15, ஆலப்புழா – 15, மலப்புரம் – 10, எர்ணாகுளம் – 8, கோட்டயம் – 7 வயநாடு- 2 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்த 1,691 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

Categories

Tech |