உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளியை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ்க்கு 15,000 கட்டணத்தை வசூலித்து உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணம் வசூலிக்கும் சம்பவம் தொடர்கதையாக மாறிக் கொண்டு வருகின்றது. அப்படி உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தை சேர்ந்த நோயாளி ஒருவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர்.
அங்கு அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தினால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது 15,000 கொடுத்தால்தான் ஆம்புலன்ஸ் வரும் என்று கூறியுள்ளனர். பின்னர் அவரும் அந்த தொகையை தருவதாக கூறி ஆம்புலன்சை அழைத்து, காவல்துறைக்கும் தகவல் அனுப்பியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்தனர். அரசு நிர்ணயித்த தொகையை காட்டிலும் பல மடங்கு அதிக அளவு வசூலித்த காரணத்தினால் அவரை கைது செய்தது மட்டுமல்லாமல், ஆம்புலன்சும் பறிமுதல் செய்யப்பட்டது.