ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடத்தில் கடுமையான கோடை வெப்பத்தில் 15 ஆயிரம் மக்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார மையத்தினுடைய மண்டல இயக்குனராக இருக்கும் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பாவில் இந்த வருடத்தில் கோடை காலம் கடுமையாக இருந்தது. இந்த மூன்று மாதங்களில் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் 15000 மக்கள் பலியாகி இருக்கிறார்கள்.
இதில் ஜெர்மனியில் அதிகமாக 4500 நபர்களும் ஸ்பெயினில் 4000 நபர்களும் பலியாகியுள்ளனர். ஆனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் எச்சரித்திருக்கிறார். ஏனென்றால் மேலும் பல நாடுகளிலிருந்து பலியானோர் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பாக கடந்த 2019 ஆம் வருடத்துடன் ஒப்பீடு செய்தால் இந்த வருடத்தில் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பலியாகியுள்ளனர்.