Categories
தேசிய செய்திகள்

மும்பை நகரில் மட்டும் இன்று 150 பேருக்கு புதிதாக கொரோனா: உயிரிழப்பு 100ஆக உயர்வு… !

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இன்று ஒரே நாளில் 150 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, மும்பையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,549 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. மேலும், இன்று 9 பேர் உயிரிழந்தனர். அதில், 7 பேருக்கு வெவ்வேறு நோய் பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளன. அதேபோல மும்பையில் மட்டும் இன்று 43 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

இதுவரை, 141 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வைரஸ் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை சுமார் 51 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து உயிரிழப்புகள் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள 9,352 பேரில் 8,048 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 980 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |