போலந்து நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் 150 மில்லியன் வருடங்கள் முந்தைய பழங்கால கடல் புதைப்படிவத்திற்கு உக்ரைன் நாட்டின் அதிபரின் பெயரை வைத்திருக்கிறார்கள்.
ஆப்பிரிக்கா நாட்டின் எத்தியோப்பியாவில் வித்தியாசமான ஒரு உயிரினத்தின் முழு புதைப்படிவம் கடலின் அடியில் கண்டறியப்பட்டிருக்கிறது. போலந்து ஆய்வாளர்கள் சுமார் 15 கோடி வருடங்களுக்கு முன் இந்த விலங்கு இனங்கள் அழிந்து போனதாக தெரிவித்திருக்கிறார்கள்.
எத்தியோப்பியா நகரில் நட்சத்திரம் மீன் வகையான முட்தோலிகள் பிரிவை சேர்ந்த இந்த உயிரினம் ஐந்து சென்டிமீட்டர் அகலமும், 10 நீளமான கால்கள் மற்றும் மிகவும் கூர்மையான நகங்கள் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ரஷ்யா மீதான போரை அதிக தைரியத்துடன் எதிர்கொள்ளும் உக்ரைன் அதிபருக்கு மரியாதை செலுத்துவதற்காக, இதற்கு அவரின் பெயரை சூட்டியிருக்கிறார்கள். அதன் பெயர், “ஒசிகிக்ரைனைட்ஸ் ஜெலென்ஸ்கி” ஆகும்.