இந்தியா முழுவதும் உள்ள 150 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் தனியார் நிறுவனங்கள் இயக்கம் ரயில்களின் கட்டணத்தை தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு வழித்தடங்களில் நன்கு வருவாய் ஈட்டக்கூடிய ரயில் சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
இதனையடுத்து பொதுத்துறை சேவைகளில் தனியார் பங்களிப்பினை கொண்டு வருவதன் மூலம் ரயில்வே நிர்வாகம் ரூபாய் 30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டவும் திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக 150 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்குவதற்கான நடைமுறைகளை ரயில்வே நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் கூடுதலாக தனியார் ரயில்களை இயக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் 12 வயது மண்டலங்களில் தனியார் இயக்கும் ரயில்கள் 1 மண்டலகமாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த தனியார் ரயில்களில் குறைந்தது 16 பெட்டிகள் இருக்கும். இதனையடுத்து தனியார் இயக்கும் ரயில்களின் நிதி, கொள்முதல், ரயில்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் உட்பட அனைத்து செலவுகளையும் தனியார் நிறுவனம் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதோடு தனியார் மற்றும் அரசு ரயில்கள் இரண்டின் நலனையும் சமநிலைப்படுத்தும் வகையில் தான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் தனியார்கள் ரயில்களை இயக்குவதன் மூலம் அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.