ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இங்கு 150 ரூபாய் பணம் இல்லாமல் ஒரு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரின் பெயர் சந்தருவன் (23) ஆகும். இந்த வாலிபரின் தந்தைக்கு சரியான வருமானம் இல்லாததால், குடும்ப பாரம் மொத்தத்தையும் சந்தருவன் தாங்கியுள்ளார். இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணங்கள் அனைத்தும் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக வாலிபர் 25 ரூபாய் கட்டணத்தில் தினந்தோரும் வேலைக்கு ரயிலில் சென்று வந்துள்ளார். இதனையடுத்து பேருந்து கட்டணம் 150 ரூபாய் இல்லாத காரணத்தால் வாலிபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது ரயிலில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் சந்தருவன் நிலைத்தடுமாறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார். இவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, சந்தருவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். மேலும் வாலிபர் உயிரிழந்ததற்கு காரணம் ராஜபக்சே குடும்பத்தினர் தான் என்று இலங்கை மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.