கோவை பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய புகாரில் யுடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎஃப் வாசன் என்பவர் பைக்கில் பல்வேறு சாகசங்களை செய்தும், இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்தும் twin throttlers என்ற தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பல இடங்களுக்கு செல்லும்போது பைக்கில் ஸ்டண்ட், வழியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு உதவுவது என்பன போன்றவற்றை செய்யும் இவருக்கு என்று தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதில் பெரும்பாலும் 17- 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை அதிகம் என்றே சொல்லலாம்.. சமீபத்தில் டிடிஎஃப் வாசன் தனது பிறந்த நாளை கொண்டாடிய போது அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்தது தொடர்பாக போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.. அது மட்டும் இல்லாமல் பிறந்தநாளன்று மேட்டுப்பாளையம் சாலையில் இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக கூடி நின்றதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்னதாக கோவை அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலையில் மற்றொரு டிக் டாக் பிரபலமான ஜி.பி முத்துவை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு 150 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுள்ளார்.. அதில் ஜிபி முத்து ஹெல்மெட்டும் அணியவில்லை.. இதனை பார்க்கும்போதே பதற வைக்கிறது.. இந்த வீடியோவை தனது யூடியூப் சேனல் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ செம வைரலானது. பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கோவை பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய புகாரில் யுடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக இயக்கி இணையதளத்தில் பதிவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் யூடியூபர் டிடிஎஃப் வாசன்…
கோவையில் டிக்டாக் ஜி.பி.முத்து உடன் (தலைக்கவசம் அணியாமல்) அதிவேகத்தில் செல்லும் வீடியோ வைராலாகி வருகிறது..#TTFVasan #TTF #gpmuthu #bike #TNPolice #Viral #ViralVideo pic.twitter.com/qkA72N3kYV
— Prem Kumar Mohan (@premkumarm007) September 19, 2022