Categories
உலக செய்திகள்

காட்டையும் மிச்சம் வைக்காத கொரோனா… பழங்குடியின சிறுவன் வைரசுக்கு பலி…!!

அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி  இனத்தை சேர்ந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் 

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸினால் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் 200 நாடுகளில் பரவி அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும்  கொரோனா அமேசான் காட்டுக்குள்ளும் நுழைந்து விட்டது. யனோமாமி  என அழைக்கப்படும் அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் வெளியுலக தொடர்பு இல்லாதவர்களே.

 

உலகை கதிகலங்க வைத்த கொரோனா இவர்களையும் விட்டு விடவில்லை யனோமாமி  இனத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரி லூயிஸ் ஹென்ரிக் மேன்டெட்டா உறுதிப்படுத்தியதோடு அந்தச் சிறுவன் ரோரைமா மாகானத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் மரணமடைந்துள்ளான்.

Categories

Tech |