Categories
தேசிய செய்திகள்

15 வருட தவிப்பு… ஃபேஸ்புக் மூலம் நடந்த நன்மை… தாய், மகனின் பாசப் போராட்டம்..!!

ஃபேஸ்புக் மூலம் 15 ஆண்டுகள் பிரிந்திருந்த தாய் மற்றும் மகன் இருவரும் இணைந்துள்ளனர்.

கொல்கத்தாவை சேர்ந்த ரமாதேவி சவுதரி என்பவரின் மகன் மித்திரஜித் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரமாதேவி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் கணவனை விட்டு பிரிந்து வெளியே வந்து விட்டார். அப்போது மித்திரஜித்க்கு வயது 7. அவர் வழக்கறிஞராக படித்து இருந்த காரணத்தால் கொல்கத்தாவிலிருந்து டெல்லி சென்று பட்டியலா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2012ஆம் ஆண்டு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

சற்று உடல்நிலை தேறிய அவரிடம் உறவினர்கள் பற்றி விசாரித்து விவரத்தை அந்த நிறுவனம் சேகரித்து பேஸ்புக்கில் அனுப்பியது. உமாதேவியின் உறவினர்கள் யாராவது இருக்கிறீர்களா என்று தகவலை பரப்பியது. இந்த பேஸ்புக் மூலம் மித்திரஜித் தொடர்பு எண்ணை கண்டுபிடித்த தொண்டு நிறுவனம் அவருடன் பேசி தாயையும் மகனையும் இணைத்து வைத்துள்ளனர். பேஸ்புக் மூலம் பல தீமையான செயல்கள் நடைபெற்று வந்தாலும், 15 ஆண்டுகளாக பிரிந்து இருந்த தாயும், மகனும் பேஸ்புக் மூலம் இணைந்த செய்தி, இணையத்தில் பல பரவி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Categories

Tech |