கனடா நாட்டில் 15 வயது சிறுமி மாயமானது தொடர்பில் அவரின் தாயார் உருக்கமாகப் பேசியது காண்போரை கலங்க செய்துள்ளது.
கனடாவில் வசிக்கும் அலெக்ஸிஸ் ஹாரீஸ் என்ற 15 வயது சிறுமி, புத்தாண்டன்று மாயமாகியுள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்களிடமும் காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், அச்சிறுமி குறித்து அவரின் தாயார் தெரிவித்ததாவது, “புத்தாண்டு அன்று காலை 7 மணியளவில் தூங்கி எழுந்தபோது என் மகள் வீட்டில் இல்லை.
அதன் பின்பு தான் அவள் காணாமல் போனது தெரியவந்தது. தற்போது, அவளின் பாதுகாப்பு தொடர்பில் கவலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பும், அவள் மாயமாகியிருக்கிறாள். ஆனால் அப்போது, எங்களுடன் தொலைபேசி மற்றும் இணையதளங்கள் மூலமாக தொடர்பில் இருந்தாள். ஆனால் தற்போது அவள் தொடர்பில் இல்லை. அவளின் இணையதள பக்கங்களைத்தான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.