Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

15 நாட்களாக வரல…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பழந்தோட்டம் பகுதியில் சுமார் 250 நபர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கோமேதகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவி மற்றும் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றி தங்கள் பகுதிக்கு வழங்குவதாக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உறுதியளித்த பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |