Categories
உலக செய்திகள்

“ஆர்ப்பாட்டக்கார்கள் மீது துப்பாக்கிசூடு தாக்குதல்!”.. 15 பேர் உயிரிழப்பு.. சூடான் இராணுவத்திற்கு அமெரிக்கா கண்டனம்..!!

சூடானில் மக்கள் ராணுவ அதிகாரத்தை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடானில் கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து ராணுவம் மற்றும் மக்கள் கலந்த கூட்டணி ஆட்சி தான் நடந்து வந்தது. அதில், அப்துல்லா ஹம்டோ நாட்டின் பிரதமராக இருந்தார். ஆனால் கடந்த மாதம் 25ஆம் தேதியன்று கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி, ஃபடக் அல்-பர்ஹன் என்ற ராணுவ தளபதி ஜெனரல் தலைவரானார்.

எனவே, ராணுவ அதிகாரத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், ராணுவத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் தற்போது வரை 24 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனிடையே தலைநகரான ஹர்டோமின் பல பகுதிகளில் கடந்த வியாழக்கிழமையன்று, இராணுவ ஆட்சியை எதிர்த்து சமூக ஆர்வலர்களும் மக்களும் போராட்டம் நடத்தினர்.

அப்போது, ராணுவத்தினர் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 15 நபர்கள், பலியாகினர். மேலும் பலருக்கு, பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இராணுவத்தினர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மேலும், அந்நாட்டில் அப்துல்லா ஹம்டோ தலைமையில் ஜனநாயக ஆட்சி மீண்டும் நடப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது.

Categories

Tech |