உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கபசுர குடிநீரைத் தினமும் 60 மிலி குடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை சித்த மருத்துவமனைகளிலும், நாட்டு மருந்தகங்களிலும் கபசுர குடிநீரை வாங்குவதற்கு மக்கள் அலைமோதி வருகின்றனர்.
இந்த கபசுரக் குடிநீர 40 முதல் 50 மிலிவரை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிறில் எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சல் உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம். இது போல ஒருவாரம் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறியவர்களுக்கும் 15 முதல் 20 மிலி வரை கொடுக்கலாம்.
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டம்ளராக ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி கால் தம்ளர் குடித்து வரவும். ஒவ்வொரு முறையும் அப்போது கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கபசுரக்குடிநீர். குறிப்பாக மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்பதால் கபசுர குடிநீர் எப்போதும் உடலுக்கு நன்மையை தரும் என்றே சொல்லலாம். ஆனால் பரவிவரும் கொரோனா வைரசுக்கு கபசுரகுடிநீரை மருந்தாக பரிந்துரைக்கவில்லை என சித்தமருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.