Categories
சினிமா தமிழ் சினிமா

15 வருடத்திற்கு முன்… ‘ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்’ சொன்ன முதல் நாள்… வெங்கட் பிரபுவின் மலரும் நினைவுகள்…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் இயக்குனர் வெங்கட்பிரபு கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், விஜயலட்சுமி, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் சிம்புவின் மாநாடு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் மலரும் நினைவுகளை பதிவு செய்துள்ளார். அதில் ‘ஆஹா நேரம் பறக்கிறது. 15 வருடங்களுக்கு முன் இன்று முதல் முறையாக நான் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என்று சொன்னேன்’ என பதிவிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |