Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“15 வயது சிறுமி பலாத்காரம்” இன்ஸ்பெக்ட்டர் பணியிடை நீக்கம்…. சென்னையில் பரபரப்பு…!!

சிறுமி ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் 15 வயது சிறுமி ஒருவரை வியாசர்பாடியை சேர்ந்த சங்கீதா(22), மதன்குமார், செல்வி, தங்கை சத்யா ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து நடந்த விசாரணையில் இதுபோல இவர்கள் பல சிறுமிகளை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில்  கார்த்திக், மகேஸ்வரி, திவ்யா உள்ளிட்ட விபசார தரகர்கள் 10 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் கைதான சத்யா என்பவர் கொடுத்த தகவலின் பேரில் வண்ணார்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன்(44) என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அது நபர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதுடன், பல்வேறு உயர் அதிகாரிகளுக்கும் சிறுமிகளை அனுப்பி வைத்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் எண்ணூர் காவல் இன்ஸ்பெக்டர் புகழேந்தி என்பவருக்கும் 15 வயது சிறுமியை அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மாநகர காவல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த இன்ஸ்பெக்டர் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை பணியிலிருந்து தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |