Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கு….. வாலிபருக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தற்போதுள்ள காலகட்டத்தில் உள்ள செல்போன்களில் படங்களை மார்பிங் செய்யும் வசதி உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட நிறைய இளைஞர்கள் பெண்களை போட்டோ எடுத்து அதனை தவறாக மார்பிங் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை செய்து வருகிறார்கள். இதனால் நிறைய பெண்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி கொளத்துப்பாளையம் கிராமம் ஆதி திராவிடர் காலனி பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நந்தகுமார்(22).இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிதாக செல்போன் ஒன்று வாங்கியுள்ளார். அவர் அந்த செல்போனை வைத்துக்கொண்டு போவோர் வருபவரை படம் பிடித்தார். அதன் பிறகு அவருக்கு தெரிந்த சிறுமிகள் சிலரை ஒன்றாக நிற்க வைத்து அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி ஒருவரும் இருந்தார். அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி அன்று நந்தகுமார் அவரது whatsappபில் குறிப்பிட்ட 15 வயது சிறுமியுடன் அவர் மட்டும் இருப்பது போன்றும் அதில் காதல் குறியீடுகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். நந்தகுமார் அவருக்கு நன்கு தெரிந்தவர் என்பதால் அவரை பார்த்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டார். ஆனால் நந்தகுமார் மாணவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து பாலியல் ரீதியாக உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் படங்களை மேலும் மார்பிங் செய்து உடல் உறுப்புகளை தவறாக காட்டி வாட்ஸ் அப்பில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதானல் அச்சமடைந்த மனைவி அவரது தாயாரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி யன்று காலையில் நந்தகுமாரிடம் சென்று இது குறித்து கேட்பதற்காக மாணவியின் தயார் வீட்டில் விட்டு வெளியே சென்றார். அப்போது மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவரது படத்தை செல்போனில் மார்பிங் செய்து தவறாக சித்தரித்ததை நினைத்து மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நிலையை பயன்படுத்தி எதிர்பாராத வகையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதனையடுத்து தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அன்று அதிகாலையில் இருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொடிமுனை போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வாலிபர் நந்தகுமாரை கைது செய்தனர். அதன் பிறகு அவர் மீது ஈரோடு மகளிர் கோட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி ஆர் மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பளித்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட நந்தகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதைத்தார் அபராதம் செலுத்த தவறினால் மேலும் மூன்று மாதங்கள் ஜெயில் தன்னை அனுபவிக்கவும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |