Categories
உலக செய்திகள்

15 வயது சிறுமியை துன்புறுத்திய இளைஞர்.. திரைப்பட பாணியில் விரட்டி பிடித்த காவல்துறையினர்..!!

அமெரிக்காவில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞரை ஒரு வருடத்திற்கு பின் போராடி காவல்துறையினர் கைது செய்துவிட்டனர். 

அமெரிக்காவில் உள்ள லிங்கோல்மஓ என்ற பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் அகமது பக்லுலி. இவர் அங்குள்ள பூங்காவிற்கு 15 வயதுடைய ஒரு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளார். இச்சம்பவம் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடந்துள்ளது.

அன்றிலிருந்து அகமதுவை கைது செய்ய காவல்துறையினர் பல வழிகளில் போராடி திணறி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அகமது இருக்கும் முகவரி காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. ஆனால் காவல்துறையினர் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட அகமது தன் வாகனத்தில் உடனடியாக தப்பித்துவிட்டார்.

எனினும் காவல்துறையினர் திரைப்பட பாணியில் அவரை விடாமல் பின்தொடர்ந்து நள்ளிரவில் சுமார் 2:30 மணியளவில் வேகமாக துரத்தி பிடித்து கைது செய்து விட்டனர். அப்போது அகமது போதையில் இருந்துள்ளார். மேலும் அவரிடமிருந்து கொக்கைன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |