சென்னை அம்பத்தூரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியன்று காலை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை. எனவே அவரின் பெற்றொர் பல இடங்களிலும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மேற்படி பாண்டியன்(24) 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார் என்ற ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் பாண்டியன் வீட்டில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சிறுமி ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து காவல் குழுவினர் 15 வயது சிறுமி மற்றும் பாண்டியன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பாண்டியன் 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியன் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பிறகு நேற்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டார்.