Categories
தேனி மாவட்ட செய்திகள்

“15 வயசு தான் ஆகுது”, ஏன் இப்படி செஞ்சிங்க…. போலீஸ் விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் குழந்தை திருமணம் நடந்த சிறுமியை அரசு அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 15 வயதான சிறுமிக்கும், 32 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் குழந்தைத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தனிநபர் எவரோ குழந்தை நல பாதுகாப்பு அமைப்பிற்கும், சமூக நலத்துறையினர்களுக்கும் ரகசிய தகவல் கொடுத்தனர.

இத்தகவலின் அடிப்படையில் கிராமத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் குழந்தை திருமணம் நடைபெற்றது உண்மை என கண்டறியப்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அரசு அதிகாரிகள் சிறுமியை மீட்டு தேனியிலிருக்கும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |