பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகை கடைக்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அருகே இருக்கும் மளிகை கடையில் படிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில் மளிகை கடைக்காரரான நடராஜ் என்பவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதுடன், ஆங்காங்கே தொட்டு பேசி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது நடராஜனால் பாதிக்கப்பட்ட 15 மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சட்டத்தின் கீழ் நடராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.