Categories
அரசியல்

15 கோடி நிதியா…? நிரூபிக்கலன்னா பதவியை விட்டு விலகுங்க…. அமித்ஷாவுக்கு சவால் விட்ட நாராயணசாமி…!!

15 கோடி நிதி கொடுத்ததை நிரூபிக்க வேண்டுமென்று நாராயணசாமி அமித்ஷாவிற்கு சவால் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில்  சிலிண்டர் எரிவாயுக்கு மாலை அணிவித்தும் வாழைக்காய் பஜ்ஜி போட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து நாராயணசாமி போராட்டத்திற்குப் பின் செய்தியாளரிடம் பேசியதில் “விமானத்தில் இருந்து கோடி கோடியாக கொட்டி அமைச்சரவையில் இருந்த எட்டப்பண்களை பயன்படுத்தி சிறப்பாக நடந்து கொண்டிருந்த ஆட்சியைக் கவிழ்த்தனர். புதுச்சேரிக்கு 15 கோடி நிதி உதவி செய்ததாக அமித்ஷாவி கூறியதை நிரூபித்தால் நான் பதவியிலிருந்து விலகுகிறேன். நிரூபிக்கவில்லை என்றால் அமித்ஷா அவரின் பதவியில் இருந்து விலகி விடுவாரா? காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்றவர்கள் கண்டிப்பாக நடுத்தெருவில் வந்து நிற்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

தாமரை மலரும் என்று வாய்மொழி பேசிய தமிழிசை தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்டார். தற்போது புதுச்சேரி அலுவலகத்தில் முதல்வராக ஆசைப்படுகிறார். கொரோனா பரவலினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளை கண்டிப்பாக நடத்துவதாக தமிழிசை கூறியதால் பள்ளி மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். இதனால் இந்த கோரிக்கையை திரும்பப் பெற வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |