பெயிண்டர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள எசனை பகுதியில் பெயிண்டரான ரூஸ்வெல்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரூஸ்வெல்ட் நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ரூஸ்வெல்ட் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரூஸ்வெல்டின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரூஸ்வெல்ட் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.