Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

15 அடி உயரத்தில் மலர்களால் உருவாக்கப்பட்ட உருவங்கள்…. தொடங்கிவைத்து அமைச்சர்…. குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்  கண்காட்சியை  தொடங்கி வைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டுதோறும் ரோஜா மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 17-வது ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது.  இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், எம்.எல்.ஏ. கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், நகராட்சி தலைவர் வாணிஈஸ்வரி, உதவி இயக்குனர் அனிதா, ஒன்றிய தலைவர் மாயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை கலைஞர்கள் 15 அடி உயரத்தில்  உருவாக்கிய  மோட்டு, பட்லு, பியானோ, மான் உள்ளிட்ட உருவங்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர்.

Categories

Tech |