அரசு பள்ளிகளில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 1480 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ,2,000 பரிசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு வினாடி-வினா போட்டி நடத்தப் பட்டிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வகுப்பிலும் 10 பேர் வீதம் மாவட்டத்திற்கு 40 மாணவர்கள், மாநிலம் முழுவதும்1480 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் பரிசு வழங்க ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக29.60 லட்சம் ரூபாய் நிதி பள்ளிகளில் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.