Categories
உலக செய்திகள்

147 நாட்கள் பிரிட்டனில்…. கேரளா மாநிலத்தவருக்கு நேர்ந்த சோகம்…!!

147 நாட்கள் வென்டிலேட்டர் உதவியுடன் பிரிட்டனில் சிகிச்சை எடுத்து வந்த கேரளாவை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

பிரிட்டனில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் குயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ராயல்பார்த்  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கொடுத்த சிகிச்சை பலன் அளிக்க தொற்றில் இருந்து விடுபட்டு வந்த ஜோசப் நுரையீரல் தொடர்பான பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தார். இதனால் எக்மோ வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சுமார் 147 நாட்கள் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை எடுத்து வந்த அவர் சில தினங்களில் குணமடைந்து விடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது இந்நிலையில் திடீரென ஜோசப் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு மரணமடைந்துள்ளார். தொற்றில் இருந்து விடுபட்டதால் அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும் என உறவினர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |