Categories
தேசிய செய்திகள்

144 தடையால் சிக்கலை சந்தித்துள்ள தினக்கூலி மக்கள்… குடிநீர் கூட கிடைக்காமல் பசியால் வாடும் அவலம்!

உலகையே பீதியில் அச்சுறுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா தொற்று நோய் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649. இதையடுத்து கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேருக்கும், கேரளாவில் 118 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தை தவிர்க்கவும், மேலும் பரவுவதை தடுக்கவும் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதில் மாத சம்பளக்காரர்களும், தொழில் முனைவோர்களும் எப்படியாவது போராடி வீட்டில் இருந்துவிடலாம். ஆனால் தினக்கூலிக்கு வேலை பார்க்கும் மக்களும், வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களின் நிலை தான் கடினமாக உள்ளது.

அந்த வகையில், டெல்லியின் ஃபதேபூர் பெரிவில் தினசரி கூலித் தொழிலாளர்கள் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து வருகின்றனர். உணவு மற்றும் அத்தியாவசிய தண்ணீர் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் மிகவும் தவித்து வருவதாக வருத்தம் தெரிவித்தனர். உணவு, குடிநீர் இன்றி வாழும் தங்களுக்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் பசியால் இறப்பதை விட நோயால் இறப்பதே நல்லது என வேதனையுடன் கூறியுள்ளனர்.

Categories

Tech |