புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகரித்து வரும் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இணைநோய்களால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் மட்டும் சுமார் 1589 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.