Categories
உலக செய்திகள்

140 மெட்ரிக் டன் ஆக்சிஜன்…. உதவிக்கரம் நீட்டிய அமீரகம்…. இந்திய தூதர் அறிக்கை….!!

இந்தியாவிற்கு 140 மெட்ரிக் டன்கள் அளவிலான ஆக்சிஜன் அமீரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்று இந்தியாவினுடைய தூதரான பவன் கபூர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் தினந்தோறும் 3,00,000 த்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமலும், அடிப்படை வசதியின்றியும் இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்படுவதால், வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் விமானங்களின் மூலம் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் அமீரகத்தினுடைய விமானப் படையினருக்கு பாத்தியப்பட சி-17 என்கின்ற போர் விமானத்தின் மூலமாக 12 கிரையோஜெனிக் கன்டெய்னர்களினுள் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமீரகத்தினுடைய வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அமைச்சகத்தினுடைய மந்திரியான ஷேக் அப்துல்லா இந்தியாவிற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அமீரக அரசு அளிக்கும் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து 140 மெட்ரிக் டன்கள் எடையுடைய மருத்துவ ஆக்ஸிஜன்கள் டேங்கர்களில் நிரப்பி லாரிகளின் மூலம் துபாய்க்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின் அங்கிருந்து இந்தியாவிற்கு சரக்கு கப்பல்களின் உதவியுடன் கொண்டுவரப்பட்டுள்ளது என்று இந்தியாவினுடைய தூதரான பவன் கபூர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |