அர்ஜென்டினாவில் உலகிலேயே மிகப் பழமையான உயிரினத்தின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
அர்ஜெண்டினாவில் உலகிலேயே மிகவும் பழமையான “நிஞ்ஜாட்டியன் சபாடாய்” வகைகளில் ஒன்றான டைட்டனோசரின் புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த டைட்டனோசரின் முழுமையடையாத எலும்புக்கூடு புதைப்படிவம் நெயுக்யூனின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை டைனோசர்கள் தான் முதன்முதலில் அழிந்து போனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதைபடிவம் மிகவும் பழமையானது என்றும், சுமார் 65அடி உருவமுடையது என்றும் ஆராய்ச்சி எழுத்தாளர் பப்லோ கல்லினா கூறியுள்ளார். மேலும் இந்த எலும்புக்கூடை வைத்து சில ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.