மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் கிராமம் கிளியனூர் ஊராட்சி பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு சுற்றித் திரிந்த மூன்று நாய்கள் சோலாட்சி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை முதலில் கடித்து குதறியுள்ளது. பின்பு கிளியனூர் பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதனால் 14 ஆடுகளின் கழுத்து மற்றும் காது பகுதிகளில் நாய்கள் கடித்ததால் சம்பவ இடத்திலேயே அவை இறந்துள்ளது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கூத்தாநல்லூர் பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் சாலையில் நடக்கவோ வாகனங்களில் செல்லவோ அச்சமாக இருக்கிறது. அதனால் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.