சீனாவைச் சேர்ந்த வீ ஜியாங்குவோ என்ற நபர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கேபிடர் சர்வதேச விமான நிலையத்தில் 14 வருடங்களாக வசித்து வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விமான நிலையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 60 வயதை கடந்த போதிலும், கடுமையான கொரோனா காலத்திலும் கூட இவர் வீட்டிற்கு செல்லாமல் இந்த விமான நிலையத்திலேயே தங்கி இருந்துள்ளார்.
ஏனெனில் வீட்டிற்கு சென்றால் சுதந்திரமாக மது அருந்தவோ, புகை பிடிக்கவும் முடியாது என்பதற்காக அவர் இந்த விமான நிலையத்திலேயே தங்கியிருந்ததாக கூறியுள்ளார். வீ ஜியாங்குவோ தன்னுடைய உணவிற்காக அருகில் உள்ள சந்தைக்கு சென்று காலையில் வேக வைத்த பன்றி இறைச்சி ரொட்டி 6 வாங்கிக் கொள்வாராம். மதிய உணவிற்காக ஒரு கஞ்சி கிண்ணம் மற்றும் சீன மதுபான பாட்டிலான பைஜு பாட்டில் போன்றவற்றை வாங்கிக் கொள்வாராம்.