பாகிஸ்தானின் எம்பி மற்றும் 14 வயது சிறுமியின் திருமணம் குறித்த செய்தியை அப்சர்வர் என்னும் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் மவுலானா சலாவுதீன் (60 வயது). இவர் பலுசிஸ்தான் தொகுதியில் எம்பியாக இருக்கின்றார். இந்நிலையில் பாகிஸ்தானில் பெண்களின் திருமண வயது 16 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மவுலானா சலாவுதீன் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் 14 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறையினர் மவுலானா சலாவுதீன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் பிரபலமான அப்சர்வர் என்னும் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அச்சிறுமியின் தந்தை “பாகிஸ்தான் எம்பிக்கும், தனது மகளுக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அச்சிறுமிக்கு 16 வயது வரும் வரை யாருக்கும் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.